பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திறனாயும் திறன் நாம் எதைப் படித்தாலும் அதனைத் திறனாய்ந்தே உணர்கின்றோம். சிறுவர்களிடம் கூட இத்திறனாய்வுப் பண்பு கருவிலே திருவுடையதாகக் காணப் பெறுகின்றது. சாதாரணமாகத் திறனாய்தல் என்பது தவறாகவே உணரப் பெறுகின்றது; திறனாய்பவரின் உண்மையான செயல் அழகையும் உண்மையையும் காண்பதேயாகும் என்பதைத் தெளிவாக உளங்கொள்ளுதல் வேண்டும். கவிதையாயி னும் வாழ்க்கையாயினும் திறனாய்வாளனுக்கு ஒரே ஒரு கடமை - ஒரு குறிக்கோள் உண்டு; அதில் அழகையும் உண்மையையும் காண்பதே அது. சில சமயம் திறனாய்வா ளன் குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமை யும் ஏற்படலாம்; ஆனால், அவ்வாறு செய்வது குறைகளை காண்பதில் தான் கொண்டுள்ள காதலால் அன்று என்றும், உண்மையின்மீது தான் கொண்டுள்ள காதலின் காரணமா கவே அவ்வாறு செய்வதாகவும் தாம் உணர வேண்டும். அழகின் நடுவே காணப் பெறும் உண்மைதான் பொலிவு டன் திகழும் என்பதை நாம் வற்புறுத்த வேண்டியதில்லை. குறை காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளவர், பிறரு டைய குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலேயே மகிழ்ச்சி அடைகின்றவர், தம்முடைய சிறுமையைத் தான் காட்டிக் கொள்ளுகின்றார் என்பது வெளிப்படை. அவரால் பொரு ளின் உயிர்நாடியை - இதயத்தை ஒருநாளும் நன்கு உணர முடியாது. அவர் பெருங்கவிஞர்களின் நட்பை எப்பொழு தும் பெறவே இயலாது. கவிஞர்களும் தம்மைப் போல மனிதர்களே என்று காட்டும் ஒன்றில் மட்டிலும் அவரு டைய அக்கறை செல்லும். சுருங்கக் கூறினால், தம்மையே அவர்களிடம் காண்கின்றனர். தம் குறைகளையே அவர்க ளிடமும் காண்கின்றனர். இத்தகைய திறனாய்வாளர் வடையை உண்ணும் செயலைவிட்டு அதன் துளையை