பக்கம்:கவியரங்கக் கவிதைகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 தாகூர் விழா 15, தாகூர் கண்ட மனிதன் தாகூர் நூற்றாண்டு விழாவின் போது பல் வேறு ஸ்தாபனங்களைக் கொண்ட திருநெவ்வேலி தாகூர் நூற்றாண்டு விழாக் குழு நடத்திய தாகூர் விழாவின்போது திரு. கா. மாயாண்டி பாரதி தலைமையில் 1967 மே மாதத்தில் கூட்டப்பெற்ற கவியரங்கில் தாகூர் கண்டம் மனிதன், குழந்தை, தத்துவம், பெண்மை முதலிய விஷயங்களைக் குறித்துப் பல கவிஞர்கள் தமது கவிதைகளை அரங்கேற்றினார்கள். அப்போது தாகூர் கண்ட மனிதனை இனங்காட்டி, தாகூரின் கவிதை பலவற்றின் கருத்துக்களை உள்ளடக்கிப் பாடி அரங்கேற்றிய கவிதை இது.