பக்கம்:கவியரங்கக் கவிதைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதற் பதிப்பின் முன்னுரை கவியரங்கம் என்பது இலக்கிய விழாக்களில் ஒரு விசேட நிகழ்ச்சியாக இடம் பெறுவது இன்று பெரு வழக்காகி வருகின்றது. தற்காலக் கவிஞர்கள் பலரையும் ஒன்று கூட்டி, அவர்களைக் குறித்த தலைப்புக்களின் கீழ் கவிதை கள் பாடச் செய்து, அவற்றை ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யும் இந்தச் சம்பிரதாயத்தை, முதன் முதலில் வானொலி நிலையத்தார் தான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்கள் என்று நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து முக்கிய மான விழா நாட்களில் வானொலியிலும், மற்றும் பிறர் நடத்தும் இலக்கிய விழாக்களிலும் விசேட நிகழ்ச்சி யாகக் கவியரங்கம் கூட்டுவது இன்றைய நடைமுறை யாகிவிட்டது; ரசிகர்கள் மத்தியிலும் அதற்குப் பெருத்த வரவேற்பும் இருந்து வருகின்றது. இந்த இருபதாண்டுக் காலத்தில் இவ்வாறு கூட்டப் பெற்ற கவியரங்கங்கள் பலப்பல... இவற்றில் சுமார் முப்பது கவியரங்கங்களில், குறிப்பாக, வானொலி, கம்பன் திரு நாள், பாரதி விழாக் கவியரங்கங்களில் பங்கு பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது; இத்தகைய அரங்கங் களில் எனது கவிதைகளுக்கு ஒரு தனி வரவேற்பும் ரசிகர்கள் மத்தியிலே இருந்து வந்துள்ளது. இவ்வாறு நான் கலந்து கொண்ட கவியரங்கக் கவிதை களிற் சில எனது 'ரகுநாதன் கவிதைகள்', என்ற கவிதைத் தொகுதியில் ஏனைய கவிதைகளோடு