பக்கம்:கவியரங்கக் கவிதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. அந்தத் தொகுதி வெளிவந்த பின்னர் நான் கலந்து கொண்ட பதினைந்து கலியரங்கங்களின் கவிதைகளும் இந்தப் புதிய தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதைகள் எவ்வெப்போது எங்கெங்கு அரங்கேற்றப்பட்டன என்ற விவரத்தை இந்நூலின் அனுபந்தமாகவுள்ள 'குநிப் புக்கள்' என்ற பகுதியில் காணலாம். எனது கவிதைகள் அரங்கேற்றமாகும் காலங்களில் நாட்டாரின் கவனத்துக் குரியவையாக விளங்கிய பல்வேறு பிரச்னைகள், நிகழ்ச்சிகள் முதலியவை பற்றிய குறிப்பும் அந்தந்தச் சமயங்களில் அந்தக் கவிதைகளில் இடம் பெறுவது வழக்கம். குறிப்புக்களில் நான் அவற்றைச் சுட்டிக் காட்டவில்லை. எனினும் அவை இயற்றப்பட்ட காலச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வாசகர்கள் அவற்றை இனம் கண்டு கொள்ளலாம், இந்தச் சந்தர்ப்பத்தில் என்னைக் கவியரங்கங்களுக்கு இழைத்துக் கௌரவித்த திருச்சி வானொலி நிலையத்தார் காரைக்குடி கம்பன் கழகச் செயலாளர் திரு. சா. கணேசன் ஆகியோருக்கும் மற்றும் இலக்கிய மன்றங் களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன். மேலும் இந்தக் கவிதைகளிற் பலவற்றைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்ட ஆசிரிய நண்பர்களுக்கும், குறிப்பாக "சரஸ்வதி', * தாமரை' ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும் என் தன்றி உரியது. கடைசியாக ஒரு விஷயம்: திருச்சிற்றம்பலக் கவிராயர்" என்ற புனை பெயரில்தான் தான் கவிதைகள் எழுதி வந்தேன்; வருகிறேன். எனினும் இந்த அம்பலக் கவிராயரின்' புனைபெயர் ரகசியம் விரைவிலேயே அம்பலமாகிவிட்டது. கவியரங்கங்களில் கலந்து கொள்ளத் தொடங்கிய காலமுதல், அங்கு நடைபெறும் அறிமுகம் முதலியவற்றால், அந்தக் கவிராயர் நான்தான் என்பது நாடறிந்த, 'ரகசியமாக'ப் போய்விட்டது. எ வேதான் எனது முதல் கவிதைத் தொகுதியை 'ரகுநாதன் கவிதைகள்' என்ற பெயரிலேயே வெளியிட் டேன்; அதனைத் தொடர்ந்து இந்த நூலும் எனது இயற் பெயரிலேயே வெளிவருகின்றது. எனது ஏனைய நூல் களுக்குக் கிட்டிய வரவேற்பை எனது இலக்கிய வாசகர் களும் 'சுவிராயரின்' ரசிகர்களும் இந்த நூலுக்கும் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு, xs-10-1983/ சென்னை ) ரகுநாதன்