பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி' எனும் இலக்கிய இதழ் பாரதிதாசன் பரம்பரையில்’ ’ முன்னணி யில் நிற்பவராக இவரை அறிமுகம் செய்து வைத்தது. சென்னையில் பேராசிரியர் மயிலை சிவமுத்து, தமிழ்த் தென்றல் திரு. வி. க. , கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சான்றோர்களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண் டி ருந்தார். பாவேந்தர் பாரதிதாசனால், த ம து மூத்த வழித் தோன்றல் இவர்தாம்’ எனப் போற்றப்பட்டவர். பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாட்டின் வானம்பாடி' என அழைக்கப் பட்டவர். 1949-ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை சி வ மு த் து அவர்களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்தகையாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும் துணையோடு சென்று எதிர்ப்பதுதான் வெற்றிக்குரிய போராட்டமுறை என்பதனால் தக்க துணையோடு (துணைவியாரோடு) ஈடு I ■ I _ __ TT TT. திருமணம் முடிந்த பின்னர்ச் சென்னையிலிருந்து விலகி வந்து காரைக்குடியில் மீ. சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழா சிரியாக அமர்ந்து 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஒய்வு பெற்றள்ளார். ஆணும் பெண்ணும் சரிநிகர்’ என்ற பாதியின் வாக்கை நிலை நிறுத்துவது போல் குமுதம், பாரி. அன்னம், குமணன், செல்வம், அல்லி என மகள் மார் மூவரையும், மகன் மார் மூவரையும் பிள்ளைச் செல்வங் களாகப் பெற்றுள்ளார். 1955-ஆம் ஆண்டில் குருதி உமிழும் கொடு நோய்க்கு இலக்கானார். பிழைப்பது அரிது’ என்ற நிலை வந்துற்ற போது புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் தாயி ஆறும் சாலப் பரிந்தெழுந்து, நோய் தீங்கி நலம் எய்த