பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அரசரும் வள்ளலும் தென்னாட்டுத் திசைதோறும் கோவில்கட்டித் திருப்பணிகள் எனும்பெயரால் அள்ளி வீசும் இந்நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்றி இருநிதியம் கல்விக்கே வாரித் தந்தார்; முன்கூட்டிச் செய்தவர் நம் செட்டி நாட்டு முதல் மன்னர் ; அழகப்பர் மற்றோர் வள்ளல்; என் பாட்டுக் கடங்காது வள்ளல் உள்ளம் கொடைமடமென் றிருசொல்லே சொல்லத் தோன்றும் (8) காடு கெடுத்தான் நடப்பவர்தம் கால் வருந்த முட்கள் தைக்கும் நச்சரவம் பலநெளியும் கொடிய காட்டைக் கெடுத்தெ ழித்து நகராக்கிக் கல்விக் கூடம் கிளைத்தெழும்பத் தானுறையும் இல்லுஞ் சேர்த்துக் கொடுத்திருக்கும் இயல்புடையான் ஈட்டுஞ் செல்வம் அத்தனை பும் ஈத்துவக்குங் குமணன் போல்வா ன் படித்து வரும் பன்னுாறு மக்கள் உள்ளம் பைந்தமிழால் அள்ளுறிப் பாடும் வள்ளல் (9) கலைக்கோவில்கள் அகரமுதல் நெடுங்கணக்கை ஒது தற்கும் அடுத்தடுத்த உயர்நிலையில் கற்ப தற்கும் மகளிருபர் கலைக்கல்வி பயிலு தற்கும் ம ண க்கர் கலைஎழிலை அறிவ தற்கும் தகவுடைய ஆசிரியப் பயிற்சிக் கென்றும் தளராத உடற்கல்வி கற்றற் கென்றும் புகலரிய விஞ்ஞானம் தொழில்நு ணுக்கம் பொறியியல்என் றத்தனைக்கும் கோவில் கண்டான் (10) முதல் மன்னர் - செட் டி நாட்டரசர் அண்ணாமலையார் கெ டைமடம் - அள்ளிக் கொடுப்பதில் அறியாமை