பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 : என் வயிர்க்கும் அருளாளன் வாடுபயிர் காணுங்கால் வாடி னேனென் றுளங்கனிய வாய்மொழிந்தார் வடலூர் வள்ளல்; ஆடுமலர்க் கொடிகண்ட மற்றோர் வள்ளல் அதுபடரத் தேர்தந்து படர்து டைத்தான்; சா டுபுயல் வீசுகையில் நமது வள்ளல் தான் வளர்த்த செடிகளெலாம் வீழக் கண்டு வாடியதை நாமுணர்வோம்; எவ்வு யிர்க்கும் வள்ளலென்போர் இரங்கியருள் செய்வர் போலும் (17) வள்ளல்களை வென்றான் பாரிவிடும் தேரதனால் வாழ்வு பெற்ற படர்முல்லைக் கொடி ஒன்றே; செல்வம் எல்லாம் வாரிவிடும் அழகப்பன் தந்த வீட்டால் வாழ்வுபெறும் பூங்கொடிகள் கணக்கில் உண்டோ? சோரிவிடத் தலைதந்தான் குமணன் என்பர்; சொல்லரிய பொருளெல்லாம் கல்விக் காக மாரிபடத் தந்ததன்மேல் வாழ்வே தந்தான் மனமுள்ளோர். இவன் கொடையின் அருமை காண்பர் (18) படுபெயலால் மிகநனைந்து குளிரால் வாடிப் பதைபதைத்து நடுநடுங்கக் கண்டு, நெஞ்சு துடி துடித்தே அடடா ஒ! என்று பேகன் துய்ய மயில் ஒன்றுக்கே ஈந்தான் போர்வை; கொடையழகன் பலமயில்கள் கற்ப தற்குக் குடியிருக்கும் தன்வீட்டை ஈந்தான் கண்டோம்: கொடை மடத்தால் உளம்பெரிது பேக னுக்கு, கொடுப்பதிலே உரம்பெரிதே அழக னுக்கு (19) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS படர் - துன்பம் சோரி - இரத்தம் மாரிபட - மழை தோற்க