பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலர்தம் செவ்வாய்க் குழலோசை கேட்டவுடன் ஆவலுடன் ஓடிவரும் ஆனிரைகள் சேர்நாடு ; மருத வளம் சேற்றில் உழுது சிறுநெல் விதைது வி நாற்றுப் பிடுங்கி நடுகாலில் நட்டுக் களேயெடுத்து நீர்பாய்ச்சிக் காப்பதனுல் நன்கு விளை கழனிச் செந்நெல் வியனுலகைக் காக்குமகம் ; செங்கரும்புச் சாறெல்லாம் சேர்ந்தோடிப் பக்கத்துப் பொங்கிவரும் வாழைமரப் பாத்தி புகுவதனுல் காய்க்கும் குலேயில் கரும்பினிமை தானேறும் ; வாய்க்கும் கமுகினங்கள் வானுயர்ந்த தென்னே என எண்ணும் படிவளரும் , எவ்விடத்துஞ் சோலேவளம் உண்னும் பழமரங்கள் ஊரெல்லாம் தோன்றுதலால் காணும் இடமெல்லாம் கண் குளிரும் காட்சியதாய்த் தோனும் மருதவளம் சூழ்ந்திருக்கும் இந்நாடு ; நெய்தல் வளம் முப்பாலும் ஆழியுண்டு மூழ்கியதன் உட்சென்ருல் தப்பாமல் முத்துண்டு சார்ந்த பவழமுண் (டு) ஆறு சுவையுள் அரிய சுவையாகக் கூறுமுயர் உப்புக் கொழிக்கும் அளமுண்டு நாடெல்லாம் சுற்றி நலங்கொழிக்கும் வாணிகத்தால் ஏடெல்லாம் ஏத்த எழிற்கலங்கள் ஒட்டுதற்(கு) ஏற்ற துறைமுகங்கள் எத்துணையோ ஈங்குண்டு : போற்றும் படியாய்ப் புவியில் பெரும்பரப்பாய் ஒதும் கடற்கரைகள் ஒன்றிரண்டாம் அன்னவற்றுள் ஈதும் ஒரு கரையாய் எண்ணத் தலைநகரில் 105