பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்போகம் விஆளகின்ற நன்செய் உண்டு முகில்குளிரச் செய்கின்ற தோப்பும் உண்டு தப்பாது விளைகின்ற புன்செய் உண்டு தங்கநகை துணிமணிகள் அனைத்தும் உண்டு துப்பாக்கும் பொழுதத்துப் புகைகள் கூடிச் சுடர் மறைக்கும் மேகமென நாளுந் தோன்றும் அப்போது வருமுறவோர் அடடா சொல்லில் அடங்குவதோ? ஆயிரமாம் அதற்கும் மேலாம் (க) எங்கிருந்தோ எவரெவரோ வருவார்; வந்திங் கென்னலமும் மனநலமும் வினவி நிற்பார்; தங்கியிருந் தெதையெதையோ கதைய ளப்பார்: தயங்காமல் உறவுரைப்பார்; உங்கள் பாட்டன் தங்கைக்குக் கணவனுடன் பிறந்தான் மாமி தம்பிக்கும். என்பாட்டி தங்கை மாமன் பங்காளி மகளுக்கும் மணமுடித்த பனையூரார் எங்களவர் என்று சொல்வார் )سی( இப்படியே உறவுரைத்து வந்து குழும் என் சுற்றம் மாநாட்டுக் கூட்டம் ஒக்கும்; முப்பொழுதும் திருமணத்துக் காலம் போல மொய்த்திருந்து விருந்துண்பார் ஒலியே கேட்கும் ; ஒப்புரவுப் பண்புணர்ந்தேன் உவந்து நிற்பேன்; உறவினர்க்கு ங்ப்போல நானி ருந்தேன்; இப்புவியில் இத்தனை பேர் உறவி ருக்க எனக்கென்ன குறையென்று நிமிர்ந்தி ருந்தேன் (டு) 109