பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணிரோ வெந்நீரோ குளிப்ப தற்கு ? தமக்கென்று தனியறையும் ஒதுக்கி விட்டோம் ; உண்பீரோ இவ்வுணவு ? களைத்தி ருப்பீர் ! ஒய்வுகொளத் துயிலுங்கள் ' என்று ரைத்து மண் மகளைக் காணுது விரித்து வைத்த மலர்மெத்தை தலைய8ணகள் காட்டி நின்று பண்பாடி அருகிருந்து தாளம் போட்டுப் பல்வரிசை காட்டுகிற உறவு கண்டேன் (ίΌα-) விரைந்துவரும் பொழுதத்துச் சட்டைப் பொத்தான் விட்டுவந்தேன் ; உறவினர்கள் அதனேக் கண்டு மறைந்திருந்து பேசுகின் ருர் ' அடடா இந்த மனிதரிடம் எளிமையைத்தான் காண்பீர் செல்வம் நிறைந்தவர்கள் இப்படித்தான் இருத்தல் வேண்டும் ; நிறைகுடங்கள் எப்போதும் தளும்பா அன்ருே ? குறைந்தவர்தாம் கூத்தடிப்பர் என்று தம்முள் கூறுவது செவியில் விழ நகைத்துக் கொண்டேன் (கை) சின்னுளில் வணிகத்தில் நட்டங் கண்டேன் சேர்ந்தடித்த பெரும்புயலால் வயல்கள் கெட்டேன் பொன்னகைகள் மாளிகைகள் ஒத்தி வைத்தேன் o பொருள்முட்டுப் பாடடைந்து துயரால் நொந்தேன்; எந்நாளும் என்வீட்டில் உண்டு வந்த எண்ணில்லா உறவினரைக் காண வில்லை; பின்னுேடித் தேடினுமே அஞ்ச லென்று பேசுதற்கோர் ஆளில்லை தனித்து நின்றேன் (கச) 112