பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தவளர் புதுக்கலைகள் தமிழிற் செய்து | மேன்மை பெற வேண்டுமென்று பாடி நின்றேன் ; செத்தமொழி சுமப்பதற்கு நாடு கின்றீர் ! செந்தமிழை வாழ்மொழியைச் சாக டிக்கப் பித்தரெனப் பிதற்றுகின்றீர் ! நன்ருே ? சொல் வீர் ! பிறட்ைசி தொலைந்துவிடின் தமிழின் மாட்சி எத்திசையும் பரவிவரும் என்றி ருந்தேன் ; இகழ்ச்சிக்கோ போர்ப்பாட்டுப்பாடி வைத்தேன் ? கலைமலிந்த தமிழ்நாட்டில் வணங்கு தற்குக் கடவுளர் தாம் ஆயிரம்பேர் ; அவர்கட் கெல்லாம். பலமனைவி ; இவரன் றி வேறு பக்கம் படையெடுப்பும் நடப்பதுண்டு ; மக்கள் உண்டு தொலைவிலிருந் திங்குவந்த சாமி யுண்டு ; தொழுகின்ற அத்தனைக்கும் சமயம் உண்டு நிலையான தமிழ்ச்சமயம் எதுதான் என்று நிலைநாட்டி வழிகாட்ட முயலக் காணேன் பித்தாகிப் போனதும்பால் மானம் உண்டா ? பெருமிதஞ்சேர் வீரமுண்டா ? தமிழர் வாழ்வில் செத்தாலும் பிறந்தாலும் மணம் செய் தாலும் செந்தமிழின் ஒலியுண்டா ? பிள்ளை கட்கு நத்துதமிழ்ப் பேருண்டா ? பேச்சில் பாட்டில் நயந்தெடுக்கும் வழிபாட்டில் உமது வாழ்வில் எத்துறையும் தமிழில்லை ! தமிழன் என்ற இனமொன்றும் உளதென்று சொலவும் வெட்கம் ! 129