பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில்: திரு. வி. க. எண்சீர் விருத்தம் தமிழுக்கோர் தீங்கென்ருல் கொதித்து நெஞ்சம் தாங்காமல் புயலென்னக் கவிதை யாக்கி அமிழ்தமெனத் தென்றலிலே காட்டி அந்த அன்னைக்கு முல்லைமலர் மாலை சூட்டி இமை என்னத் தமிழ் காக்கும் தலைவ ! தோழ ! ஈண்டிவந்து கவிகேட்கும் பெரியிர் ! செய்யுள் அமைதியொடு பாமாலை புனை வீர் ! நெஞ்சத் தன்பு கலந் தெழுகின்ற வணக்கம் கொள்வீர் (க) குறளென்னும் சொற்பொருளைச் சிறிதும் கானர் குலவு தமிழ் இலக்கணத்தை என்றுங் கேளார் அறநூலோ பிறநூலோ ஒன்றும் தேரு ர் அகரமுதல் வரிசைமட்டும் தெரிந்தாற் போதும் குறளிடத்துக் குறைசொல்வார் திருத்தம் செய்வார் புத்துரையும் குறித்துரைப்பார் திருக்கு றட்குப் பிறவுரைகள் சரியில்லே பிழையே என்பார் பெருகிவரக் காண்கின்ருேம் இந்த நாளில் )ع-( تیت 45