பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்நட்பு தொழிலாளர் நலங்கருதி உழைக்கும் போழ்து துாய்மனத்துக் காந்தியிவண் வந்தார் என்று முழுதான தமிழ்ப்பெரியார் காணச் சென்ருர்; முகஞ்சுருக்கி ' எற்காணக் குருதி தோய்ந்து பழுதான கைகளொடு வந்தாய் ?' என்று பகர்ந்ததுமே திடுக்கிட்டார் திகைத்து நின்ருர் தொழுதபடி ஒருசொல்லும் கூரு ராகித் துயர்படிந்த மனத்தினராய் இல்லம் சேர்ந்தார் (உக) " அமைதிக்கே நமதுவிரல் அசையும் அல்லால் அறியாது மற்ருென்றும், குருதி ஏது ? சுமைமனத்தர் அவர் மனத்தை மாற்றி விட்டார் ! சூதறியா நல்லுள்ள மேனும் கீழோர் இமைநொடியில் மாற்றுவரோ ?’ என்று சிந்தித் திணிதிருந்தார்; நோதக்க நட்டார் செய்யின் தமையறியாப் பேதைமையாம் கிழமை யும்மாம்; தமிழ்நெஞ்சம் வன்சொல்லை மறந்த தன்றே )به سه( தென்னுட்டில் இந்திமொழி புகுந்த காலைத் திரு நாட்டின் முதலமைச்சர் இவர்க்கு முன்பு பன்னுட்கள் பழகிய நல் நண்ப ரேனும் ' பைந்தமிழ்க்குத் தீங்குசெய வேண்டா வென்று முன்கூட்டி இடித்துரைத்தார், அல்லல் ஏற்ருர்; முகநகுதற் பொருட்டன்று நட்டல், நட்டார் பின்னிர்க்கும் மிகுதிக்கண் இடித்து ரைத்துப் பேசுதற்கே என்றகுறள் தெளிந்து நின்ருர் (உக) 52