பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் கரம் போல மாணிக்கம் முத்தெல்லாம் அள்ளி இறைக்கின்ற வெள்ளருவி ஆர்க்குமலை; வந்தார்க்குத் தந்து மனங்குளிரச் செய்வதற்கு முந்துவார் போல முகில் குளிரச் செய்யும8ல; காட்சி அந்த மலைச்சாரல் ஆழச் சுனே யாட வந்தேன் ஒரு நாள்; வடிவழகி ஆங்கொருத்தி வேங்கைமரத் தின் கீழ் விளையாடும் தோழிகளே நீங்கித் தனியிடத்தில் நின்றிருந்தாள்; அன்னவள் தான் வார்த்தெடுத்த பொற்சிலையோ ? வானத்து வெண்ணிலவைப் பேர்த்தெடுத்துச் செய்த ஒரு பெண்ணுருவோ? மின் கொடியோ? தேர்ைந்த தாமரையும் செவ்வாம்பல் மென் மலரும் கார்ைந்த நீலக் கருங்குவளைப் போதிரண்டும் எள்ளின் மலரும் எழில் மகிழம் பூவுடனே வெள்ளே நிற முல்லை அர விந்தத்தின் மொட்டிரண்டும் செங்காந்தட் பூவிரண்டும் சேர்ந்து மலர்ந்திருக்கும் எங்கெங்கும் காணு இளவஞ்சிப் பூங்கொ டியோ ? ஆடுமயிற் சாயலுடன் அன்னத்தின் மென்னடையின் கூடும் கிளிமொழியின் கூட்டுப் படைப்பாவாள்; சிற்பி மனத்தகத்துக் கற்பனையாற் காண்பதன்றிப் பொற்பின் திருவுருவைப் பூரணமாய்ச் சிற்றுளியால் காட்ட இயலா தே ! காவியமும் ஓவியமும் போட்டியிட்டுத் தோற்பதன்றிப் பொற்பெழுதப் போகாத கண்ணுக் கினியா அளக் கண் டேன் விழிவழியே நண்ணிக் கலந்துளத்து நானள்ை; கட்டுண்டேன்; ஐயம் மின் காட்டும் சிற்றிடையாள் மேட்ைடின் ஆரணங்கோ ? தென்னுட்டுக் காரிகையோ ? அன்றி வட நாட்டுப் 78