பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



கவிஞர் தாகூருக்குத் தமிழ் மொழி தெரியாது; தமிழில் எழுதினால் தாம் எழுதும் அற்புதமான தமிழ்ச் சொல்சோவியங்களின் உட்பொருள் புரியாது; அதனால் தமிழின் அருமையை, அவர் பெருமையோடு உணர முடியாது போய் விடுமே என்ற ஆர்வத்தில் ஆங்கிலத்திலே பாமாலைகளை எழுதி வந்திருந்தார்கள்.

பாமாலை பாட எழுந்த புலவர் தனது வாழ்த்திதழை ஆங்கிலத்தில் தங்குதடையின்றிப் படித்தார்! இந்தப் பாடலை மிகவும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் தாகூர்,

“குயில் தன் குரலிலேயே கூவிட வேண்டும். கிளியைப் போல பாட பயிற்சி செய்யக் கூடாது.” நீங்கள் உங்களுடைய அருமையான தாய் மொழியிலேயே என்னைப் பெருமையோடு பாராட்டிப் பாடியிருக்க வேண்டும்.

நான் 1911-ஆம் ஆண்டில், எனது ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில், இந்திய நாட்டிற்காக ‘நாட்டு வணக்கம்’ என்ற பாடலை எழுதினேன். அந்தப் பாடலில் எனது தாய் நாடான வங்காள மாநிலத்தை, உங்களுடைய தாய் நாடான ‘திராவிட நாட்டின் பெருமைக்குப் பின்னே தான்-வைத்து எழுதினேன். ஏன் தெரியுமா?

“எனது வங்கம் ஒரே ஒரு நாடு! அதாவது ஒரே ஒரு மாநிலம்! எனது தாய்மொழி வங்கம், வளமான மொழிகளிலே ஒன்று. ஆனால், உங்களது ‘திராவிட’ என்ற நாடு, நான்கு நாடுகள். அதாவது நான்கு மாநிலங்களைக் கொண்ட தென்னாடு... மூலமொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நான்கு மொழிகள் உடைய மொழி உங்களது