பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்


வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு அவர் கலை, இலக்கியத் துறையிலே ஈடுபடலானார்.

தாகூர் எழுதிய முதல் புத்தகம்

முதலில் இசைத் துறையில் மும்முரமாகப் பணியாற்றினார். புதிய சில இசை நயங்களைக் கண்டு பிடித்து வங்காளத்திற்கு வழங்கினார். அந்த நேரத்தில் வங்காளத்தில் கல்கத்தா அருகே கங்கை நதிக் கரையிலே உள்ள சந்திர நாகூர் என்னும் நகரில் அவரது அண்ணன் ஒருவர் வசித்து வந்தார்.

அந்த ஊருக்கு ரவீந்திரர் சென்றார். கங்கை நதியில் பொங்கி வரும்வெள்ளத்தின் அழகையும், அதன் ஆரவார ஆர்ப்பரிப்பு ஓசை நயங்களையும் பலவிதமாகப் பல முறைகள் பார்த்தும், கேட்டும் வியந்தார்.

கங்கை ஆறு ஓரத்திலே ஓரிடத்தில் அமர்ந்து, அதன் ஒசை, வேகம், வெள்ளப்பெருக்கு நீர்க்கொந்தளிப்பு ஆகியவற்றைக் கூர்மையாகக் கவனித்து, அதனதன் செயலசைவுகளுக்கு ஏற்றவாறு பல பாடல்களை எழுதினார்.

இவ்வாறு அவர் தொடர்ந்து எழுதிய பாடல்கள் பற்பல. அவற்றை எல்லாம் தொகுத்து ‘மாலைப் பாடல்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக ரவீந்திரா் வெளியிட்டார். இந்தப் புத்தகம் தான் அவரது பெயரில் வெளியான முதல் புத்தகமாகும்.

‘மாலைப் பாடல்கள்’என்று வெளி வந்த தாகூரின் முதல் புத்தகத்தைப் பார்த்து அவரது தந்தையார் தேவேந்திர நாத் தாகூர், பேரானந்தம் பெற்றார். அதனைப் போலவே,