பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



வாழ்விக்க என்ன வழிகள் என்பதைக் கவிஞர் தாகூர் இரவு பகலாகச் சிந்தித்தார்.

கிராமங்கள் பலவற்றுக்கும் அவர் சென்று கண்டறிந்த விவரங்களை எல்லாம் செய்திகளாக, கிராமத்துச் சிறுகதைகளாக, எழுதினார்! பிற்காலத்தில் அந்த எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த இலக்கியங்களாகப் போற்றப்பட்டன. அதேநேரத்தில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அனைவரையும் கிராமச் சீர்திருத்தத்தில் ஈடுபட வைத்தார். இவ்வாறு கவிஞர் தாகூர், தனது எழுத்துக்களின் வலிமைகளை, வலியோர் சிலரை எதிர்க்கவும், எளியோர் பலரை வாழ்க்கையில் உயர்த்தவும், கிராம முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாந்திநிகேதன் பற்றி காந்தியடிகள் கருத்து

கவிஞருக்கு இப்போது வயது நாற்பது. அதாவது 1901-ஆம் ஆண்டில் மற்றுமோர் மாறுதல் அவரிடையே தோன்றியது. அவரது உள்ளத்திலிருந்து அமைதி கலைந்தது. ஏதோ ஒரு புது உணர்வைத் தேடி அவரது அறிவு அலைந்தது.

தேவேந்திர நாத் தாகூர் போல்பூர் அருகே சாந்திநிகேதன் என்ற ஓர் அமைதிக் கோயிலை உருவாக்கி இருந்ததையும், முன்பே கவிஞர் தாகூர் தனது தந்தையாருடன் சென்று அந்த ஆசிரமத்தைக் கண்டு ஆனந்தப்பட்டதையும் ஆண்ட்ரூஸ், பியர்சன் போன்ற பேரறிவாளர்கள் பலர் அங்கே சென்று கல்வி, கலை, அமைதி, தியானம் போன்ற வளர்ச்சிகளுக்காக உழைத்து வந்ததையும், அதுதான் இன்றும் உலகம் போற்றும் சாந்தி-