பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கவியரசா் இரவீந்திநாத் தாகூர்



கவிஞர் பெருமானுடைய அரசியல் போராட்டத்திலே ஆழ்ந்து கிடந்த தத்துவ உணர்வுகளையும், மனித நேய மாண்புகளையும் ஆழ்ந்தறிய முடியாத வங்கத்துப் பொது மக்களில் பலர், தாகூரை பழித்தார்கள், வைதார்கள், இழிந்துரையாடினார்கள், ஏசினார்கள்! ஆனால் தாகூர் எவருடைய இழிவையும் புகழையும் எதிர்பாராமல் நாட்டுப்பற்றோடு நடந்தார்! அதனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. மக்கள் தொண்டு என்ற கடமையிலேயே கண்ணாய் இருந்தார்.

அரசியல் போராட்டத்தை நெறிதவறி, மனித நேயம் மீறி, வன்முறைகளுடன் நடத்துவதைவிட, சிறந்த சேவைகளை பள்ளிக் கூடத்திலும், எழுத்திலும், கிராம மக்களிடத்திலும் செய்ய முடியும் என்ற மன உரத்தோடும், பொறுமையோடும் தனது அரசியல் பகையாளர்களுக்கு உணர்த்தினார்.

இந்து-முஸ்லீம் கலகங்கள் 1908ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. அந்தப் பிணக்கத்தைத் தடுக்க அமைதியான முறையிலே எவ்வளவோ அரும்பாடுபட்டார்! இணக்கமே ஏற்படவில்லை. அதற்கு நேர்மாறாக வங்காள மாநிலம், இரண்டாக மதத்தின் பெயராலேயே துண்டாடப்பட்டு விட்டதே என்று ஆற்றொணாத் துயருற்றார் கவிஞர் தாகூர்.

மறுபடியும் சாந்தி நிகேதன்

உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்று இந்திய அறிவுக்குப் புகழ் ஈட்டிய ‘கீதாஞ்சலி’ எனும் நூலை கவிஞர் தாகூர் அரசியலை விட்டு விலகிய பின்னர்தான் எழுதினார்.

கவிஞர் தாகூர் பல நாடகங்களை எழுதினார்! அந்தநாடகங்களை சாந்திநிகேதனிலேயே அரங்கேற்றினார். அதற்கான