பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்,வி.கலைமணி

77


நிகேதனுக்கு வந்த போது நண்பரானவராவார். அந்த நண்பர் ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் அவர் திரும்பத் திரும்பப் படித்து, அதன் இனிமையைச் சுவைத்தார். தனது நெருங்கிய நண்பரான யீட்ஸ் என்பவரிடமும் ‘கீதாஞ்சலி’யைக் கொடுத்து படிக்குமாறு கேட்டுக்கொண்டார். மற்றும் பல ஆங்கில நண்பர்களுக்கெல்லாம் ரோதென்ஸ்டின் அந்த நூலைக் கொடுத்து படிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ரோதென்ஸ்டின் நண்பர்கள் வட்டம் முழுவதும் கீதாஞ்சலி நூலைப் போற்றிப் புகழ்ந்தது. கவிஞர் தாகூரின் நண்பர்களான வெல்ஸ், பெர்னாட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ராபர்ட் பிரிடம்ஜ் போன்ற அனைவரும் அவரது நூலைப் பாராட்டினார்கள். அப்போது ஆண்ட்ஸ் சாந்திநிகேதனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்.

லண்டன் நகர் நண்பர்கள் வட்டம் தாகூருக்கு விருந்தளித்துப் பாராட்டியது. புத்தகமாகிவிட்ட ‘கீதாஞ்சலி’ நூல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலே அச்சிட்டுப் பரபரப்பாக விற்பனையானது. உலக நாடுகள் எல்லாம் தாகூரையும், அவரது எழுத்தாற்றலையும் புரிந்து கொண்டன.

கீதாஞ்சலியை நன்றாக ஊடுருவி வாசித்த சமயச் சார்புடைய சங்கத்தார், ரவீந்திர நாத் தாகூர் வெறும் கவிஞர் மட்டுமன்று; அவர் ஒரு சமயத் தலைவராகவும் காட்சியளிக்கின்றார் என்று அவரை மத பேதமின்றிப் பாராட்டினார்கள். ‘கீதாஞ்சலி’யின் பாடல்கள் அன்புப் பாடல்களே என்று அவர்கள் கருத்தறிவித்தார்கள்.

கவிஞர் தாகூர் லண்டன் மாநகரிலிருந்து அமெரிக்கா சென்றார். அங்கே சில பல்கலைக் கழகங்களது வேண்டு-