பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

81


ஆங்கில நடையில் மொழி பெயர்க்கும் அளவிற்கு நல்ல திறமையையும் வளர்த்துக் கொண்டார்!

‘கீதாஞ்சலி’யை ஆங்கிலத்திலே அவர் மொழிபெயர்த்த போதும் கூட, அதை அவர் நூலாக அச்சிட விருப்பம் காட்டவில்லை. ஆனால், அவரது மொழி பெயர்ப்பை ஆங்கிலேய அறிஞர்கள் பாராட்டுவதை அறிந்த பிறகு தான் அதை நூலாக வெளியிட்டார்.

நோபல் பரிசு கீதாஞ்சலிக்கு கிடைத்த பிறகும் கூட, தான் எழுதிய எல்லா நூல்களையும் தனது தாய் மொழியான வங்களாத்திலேயே எழுதினார். ஆண்ட்ரூஸ் என்ற அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “உமது தாய் மொழியான இங்கிலீஷில் இயல்பாக, நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள். எனக்கு அந்த இயல்பு வரவில்லை” என்று குறிப்பிட்டு, அவரவர் தாய் மொழியின் இயல்பை அவர் பெருமையாகச் சுட்டிக்காட்டினார். இந்த நம்பிக்கையை கவிஞர் தாகூர் தனது இறுதிநாள் வரையிலும் கடைப்பிடித்தார்.

முதல் உலகப் போர் துவங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னரே, கவிஞர் தாகூர் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டார். அதனால், அந்தந்த நாடுகளிலுள்ள அறிஞர்களுடன் கலந்து உரையாடி நட்பும் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு உண்டாயிற்று.

ஐரோப்பிய நாடுகள் தங்களது நாகரிகத்தை வளர்த்துப் பெருக்கிக் கொண்டாலும், அந்த நாடுகள் ஒன்றை ஒன்று அழிக்கும் பகையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனவே என்று தாகூர் வருத்தப்பட்டார். காரணம், அந்த நாடுகள் இடையே அன்பும், மனிதநேயமும் போதிய அளவு வளராததால்தான், அவை ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சும்