பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



இதுபோன்ற சுகாதாரச் சீர்த்திருத்த ஏற்பாடுகளால்.அப்பகுதியிலே மலேரியா போன்ற கடும் நோய்களிலே இருந்துமக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஒவ்வொரு குடும்பமும் உடல் நலத்தோடு வாழ்வதற்காக கூட்டுறவுக் கழகத்தில் மருத்துவக் கட்டணத்தொகையையும் சேர்த்துக்கட்டிய காரணத்தால் உடல் நலத்தைக் காப்பதில் டாக்டர்கள் முழுக்கவனம் செலுத்தி நோயே வராமல் செய்தனர். கிராம மருத்துவர்களும், மக்களுடன் கிராமங்களிலே வாழ்ந்து தொண்டாற்றி வந்தார்கள்.

கிராமங்களில் கல்வித் தொண்டு

கிராமத்துப் பள்ளிக் கூடங்களிலே பணியாற்றிடும் ஆசிரியர்களது குறைகள் என்ன என்று உணர்ந்து, அவர்களுக்குரிய தேவைகளைச் செய்து, அவர்களுடைய கல்வித் தொண்டு வளருமாறு கவிஞர் தாகூர் திட்டமிட்டுப் பணியாற்றினார். கிராம முன்னேற்றத் தொண்டர்களுக்கும், கிராம ஆசிரியர்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமாறு தாகூர் திட்டம் அமைத்தார்.

கிராமப் பள்ளிகளது மாணவர்களுக்கும், கிராமத்தொண்டர் படைகளுக்கும் இடையே தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் தாகூர், தொண்டர் படையை அமைத்துக் கொடுத்தார். மாணவர்கள் அந்தத் தொண்டர் படையில் சேர்ந்து கூட்டுறவு அடிப்படையில் அவரவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து கொள்ள முடிந்தது.

இந்தத் தொண்டர் படையினர் கடைப்பிடிக்கும் விதிகளைச் சுருக்கி நான்கே நான்கு வரிகளில் கவிஞர் தாகூர் ஒரு பாடலை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார். துன்பங்கள் கிராம