பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


மாணவர்கள், தலைமை நிலையமான ஸ்ரீ நிகேதன் வர வேண்டும். அங்கே கொஞ்சக் காலம் தங்கிப் பயனடைவது பழக்க வழக்கமானது.

ஸ்ரீ நிகேதன் நிலையத்தைச் சுற்றி, பல கிராமங்களுக்குப் பொதுவான உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதியும் அமைந்தன. எட்டு அல்லது ஒன்பது வயதில் அங்கு வந்து சேரும் மாணவர்கள், பதினைந்து, பதினாறு வயது வரைக்கும் தங்கிக்கற்றார்கள். வங்காள இலக்கியமும், வங்காள வரலாறும் அங்கே கற்பிக்கபப்பட்டது. உலகச் செய்திகளை அறிந்தும், வாழ்க்கை வரலாறுகளைப் படித்தும் மாணவர்களின் அறிவு வளர ஏற்பாடு செய்தார்கள். கைத் தொழில்கள் கற்பிக்கப் பட்டன. ஆனால், மதிப்பெண்கள் பெற்றுத் தேற வேண்டிய பொதுத்தேர்வு முறையை தாகூர் அங்கே நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏன் கவிஞர் தாகூர் தேர்வு முறையை அங்கே நடத்தாமல் விட்டு விட்டார்? காரணம், தேர்வுமுறை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இடையூறானது; முட்டுக் கட்டை போட்டு ஓடும் தேரை நிறுத்துவது போன்ற ஒரு மனத்தடங்கல் கல்வி முறை அது என்பது கவிஞரின் கொள்கை. அதனால் அங்கே அவர் தேர்வு முறையை நடத்தவில்லை.

அறிவை வளர்ப்பதில் உணர்ச்சியே மிக முக்கியமானது. கல்வி என்பது கட்டாய உணவு அல்ல என்று கவிஞர் உணர்ந்தார்.

சாந்தி நிகேதன் பள்ளியில் மற்றவர்களது விருப்பத்திற்கு இணங்கி, ஆரம்பத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வுத் திட்டத்தின்-