பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் TFT T ஏன் ? குறுகிய நோக்கத்தாலா ? துவேசமனத்தாலா ? தன்னை மற்றவன் தாழ்த்தவோ அழிக்கவோ கருதினால், தனி மனிதன் கூட விரிந்த மனப்பான்மையை விடுத்துப் பிரிந்த மனப் பான்மையுடையவனாகி விடுகிறானே ! தனி மனித வாழ்க்கையே இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு சமுதாயம்தான் கெட்டழிந்து மற்ற சமுதாயம் வாழ வேண்டுமென்ற விரிந்த மனப்பான்மையுடனா இயங்க முடியும்? தாய்மொழி கெட்டழியினும் பிறமொழி வாழட்டும் என்று எவரேனும் எண்ணுவாரா? இத்தகைய விரிந்த மனப்பான்மையை எந்த நாட்டு வரலாறும் எடுத்துக் கூறவில்லையே. அறநூல்களும் அவ்வாறு மொழிய வில்லையே. அப்படியே இது குறுகிய மனப்பான்மை யாகத்தான் இருக்கட்டுமே இருந்தால் குடியா முழுகிப் போகும் ? தம் தாய்மொழி எவ்வாறாயினும் ஆகுக! நாம் பரந்த மனம் படைத்தவராக இருந்து தேசியம் பேசுவோம் எனத் திரியும் விரிந்த மனப்பான்மையினருக்குப் பிரசன்! விகடன்' என்னும் தேசிய இதழ் கூறும் அறிவுரையைக் கூறுகிறேன் கேள். 15-12-53 ஆம் நாள் வெளி வந்த இதழ் நடுவுநிலைமையுடன் எழுதியுள்ளது. அதனை அப்படியே தருகிறேன். "தேசிய வெறி சில சமயங்களில், பகுத்தறிவை இழக்கும்படி செய்து விடுகிறது. பல சமயங்களில் சுய சிந்தனையை மழுங்கடித்தும் விடுகிறது. இதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாய் விளங்குபவர்கள் இந்தி மொழி ஏகாதிபத்தியவாதிகளாவர். ஒரே மொழி, ஒரே தலைவன்,