பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறமொழிப் பயிற்சி எப்பொழுது? அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். நான், சென்ற மடலில் நாகர்தம் மொழிப்பற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்நாகரின் மொழிப் பற்றைப் பற்றி விளக்கமாக எழுதும் படி வினவி யிருந்தனை, எழுதுகிறேன். முழு விளக்கம் தருகிறேன் கேள்; தமிழைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுவேன். உன் போன்ற இளைஞரிடம் உண்மையான தமிழார்வம் தோன்றி விடின் எதிர்காலத்திலாவது தமிழ் உயர்நிலையடையும், தமிழகம் தமிழகமாக விளங்கும் என்ற எண்ணமுடையவன் யான். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற உணர்வுடையவன் யான். தமிழுக்காக என்னைப் பயன்படுத்தும் இயல்புடைய வன் யான். ஆதலின் தமிழைப் பற்றி மகிழ்வுடன் எழுதுவேன். அய்ம் பெருங் காப்பிங்க ளு ள் ஒன்றான மணி மேகலை, நாகர்கள் பற்றிய குறிப்புகளை, செய்திகளை நமக்குக் கூறுகிறது. அதனையே உனக்கு எழுதுகிறேன்.