பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்க்கே அமைந்த இயல்பான முறையில் எளிமையாகத் தந்துள்ளார். “உள்ளத் துள்ளது கவிதை-இன்ப உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை” இது தான் கவிமணி தரும் விளக்கம். உள்ளத்தி லிருந்து கவிதை வரவேண்டும். அஃதும் இன்ப உருவாக வர் வேண்டும். அது தெள்ளத் தெளிந்த தமிழில் அமைந்திருக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார். ஆனால் இன்று கவிதை உள் ளத்திலிருந்தா வருகிறது. இன்ப வுருவெடுத்தா வருகிறது. தெள்ளத் தெளிந்த தமிழிலா வருகிறது. அனைத்துமே தடுமாறிப் போயல்லவா கிடக்கிறது! Gನಿ சிலர் எழுதுவதி : நல்ல கருத்துகள் நிறைந்து காணப்படும். ஆனால் இலக்கண அமைப்பே புறக்கணிக்கப் பட்டுக் கிடக்கும். கருத்து மட்டும் கவிதையாகி விடாது. சிலர் புனைவதிலே இலக்கண முறை போற்றப்பட்டிருக்கும். ஆனால் கருத்துகள் காணாமற் போய்விடும். இலக்கண அமைப்பு மட்டும் கவிதையாகி விடாது. கருத்தும் இலக்கண அமைப்பும் இணைவதே கவிதை. உயிரும்,வளர்ச்சியும்,பொருளும்,இலக்கண அமைப்பும் கலந்ததுதான் கவிதை. வீடு என்றால் அடிப்படை நாற்புறமும் சுவர்கள், மேற்கூரை, வாயில்,சாளரம் முதலியன வேண்டும். இவற்றுள் எது குறையினும் வீடென்று பெயர் பெறாது. அது போலக் கவிதைக்கு வேண்டிய கூறுகளில்