பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T - = - = *T TT T (கவியரசர் முடியரசன் 123) எழுதிப் பயிற்சி பெறு. எழுதியதை, வல்லார் ஒரவரிடம் காட்டித் திருத்திக் கொள். இவ்வாறு பயிற்சி பெறாமல் மேடை ஏறாதே. இதழ்களுக்கு எழுதாதே; நூல் வெளியிட ஆர்வங் A. கொள்ளாதே. விளையாடக் கூடப் பயிற்சி தேவைப் படுகிறதே. பயிற்சியின்றி விளையாட்டுப் போட்டிகளிற் கலந்து கொள்ள முடியுமா ? விர னாகத் தான் திகழ முடியுமா? தோண்டத் தோண்டத் தானேநீர் ஊற்றெடுக்கிறது ? ஒரடி இரண்டடி தோண்டினால் மட்டும் போதுமா ? ஆழமாகத் தோண்ட வேண்டுமல்லவா? அது போல ஆழமான பயிற்சி யிருந்தாலன்றோ கவிதையும் ஊறும் ? புதுமை திே பெயராலே கவிதைக் குத் தீங்கு செய்து விடாதே. புதுமை யென்றால் பாடும் பொருள் புதுமையாக இருக்கலாம். உவமை புதுமையாக இருக்கலாம். சொல்லும் பாங்கு புதுமையாக இருக்கலாம். சொற்கள் புதுமையாக இருக்கலாம். அஃதாவது ஆக்கச் சொல்லாக இருக்கலாம்; வடிவங்கள் புதுமையாக இருக்கலாம். இவற்றை விடுத்து, வடிவமே இல்லாமல், இலக்கணமும் இல்லாமல் எதுகை மோனை கூட இல்லாமல் அடிப்படையைத் தகர்த்தெறிவது புதுமையாகாது. ஒவியங் கூட இன்று புதுமை யென்ற பெயரால் உருக்குலைந்து கிடக்கிறது. முன்பெல்லாம் உயிரோவியம் என்று கூறுவர். அன்று வரைந்தவை அவ்வாறிருந்தன. இன்று புதுமையின் பெயரால் எழுதப்படுபவை உயிரற்றுக் கைகால்கள் சிதறுண்டு, வெற்றுக் கோடுகளாகக் காணக் கிடக்கின்றன. இத்தகு புதுமை நோக்கிச் செல்லும் ஒவிய வுலகமும் காவிய வுலகமும் எங்கே சென்று முடிவுறுமோ தெரியவில்லை.