பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 124 T - அன்புள்ள இளவரசனுக்கு 고 கவிதையின் நல்ல சொற்கனைப் பயன்படுத்து, சிதைந்த சொற்களை ப் பிற மொழி ச் சொற்களைப் பயன்படுத்தா தே. ஒரிரு இடங்களில் அரிதாக வரலாம். கவிதையில் நன்மொழி புணர்த்தல் மிகமிகத்தேவை. அச் சொற்கள் பொருளாழம் உடையனவாக இருத்தல் வேண்டும். பாடலில் இனிய ஒசை அமைதல் வேண்டும். பயில்வார்க்கு இன்பம் தரவேண்டும். சுருக்கமாகச் சொல்லுதல் வேண்டும். சுருங்கக் கூறினும் விளங்கிக் கொள்ளுமாறு சொல்லும் முறை அமைதல் வேண்டும். எதுகை, மோனை முதலிய தொடைகள் அமையப் பாடு தற்குத் தயங்காதே. நம் நாட்டுப் பழமொழிகள் கூட எது கை) மோனை அமைந்து காணப்படுகின்றன. தாய்மார் பாடும் தாலாட்டுத்ட எதுகை மோனை அமைந்து காணப்படுகிறது. நம் தமிழுக்கு இயல்பாக அமைந்த சிறப்பு அது. அச் சிறப்பை நீ கெடுத்துவிடாதே. அதில் ஒர் இனிமையும் அழகும் உண்டு. பிற மொழிகளைப் படித்து விட்டு அம் மொழிகளின் மரபைப் பின்பற்றாதே. உன் மொழிமரபை அறிந்து அதன் படி நட. அதற்காகத்தான் பயிற்சி வேண்டும் என்று நான் கூறுகிறேன். இலக்கியப் பயிற்சியும் மொழிப் பயிற்சியும் நன்குடையார்க்கே அது நன்கு வாய்க்கப் பெறும். இல் லார்க்கு அஃது எளிதின் இேம்ையாது அவர்க க்கு எளிதின் கைவரப்பெறாமையால் எதுகை மோனை வேண்டா வெனக் கதைப்பர், எள்ளி நகையாடவும் செய்வர். அவர்தாம் அரங்கின்றி வட்டாடுவர். நீ அக் கூட்டத்துட் சேர்ந்துவிடாதே. மரபுக் கவிதை யென்று உன் மடலில் ஒரிடத்துக் குறித் தி ருந் தாய் . அஃது எனக் குப் புதுமையாகவும்