பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(விரசர் முடியரசன்-25) பிட்ட இலக்கணம் அவன் பாடல்களிலே தானாக அமைந்து பிடும். அவன்தானே கவிஞன் ? “காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று” என்ற பழமொழியைக் காட்டிப் பாடல்யாக்க யாப்பிலக்கணம் தேவையில்லையென வாதிடுவரும் உளர். மேலோட்டமாக இதனைப் படிப்பவர் அவ்வாறுதான் கூறுவர். அதனுட் பொதிந்து கிடக்கும் கருத்தை அவர்கள் உணராதவரே. கவிதை பாடக் காரிகை கற்க வேண்டுவதில்லை என அவ்வரிகள் கூறவில்லை. வறுமையில் வாடிய புலவன் ஒருவன் கூற்று இது_ (கவிபாடிப் பிழைப்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது எவ்வளவோ மேல் என்னுங் கருத்தைத்தான் அவன் அவ்வாறு கூறுகின்றான். “அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக் கல்வி அதிகமென்றே கற்று விட்டோம்” என்று தொடங்கும் பாடலில், மோகனமாடக் கழைக் கூத்தாடச் செப்பிடுவித்தை காாடத் தெரிந்தோமில்லையே. வேசையராகப் பிறந்தோ மில்லையே சனியான தமிழை விட்டுத்தையலாரிடமிருந்து து துபோய்ப் பிழைத் தோமில்லையே என்ன சென்மம் படுத்துலகில் உழல்கின்றோமே என்று வறுமையில் வாடிய புலவன் ஒருவன் பாடுகின்றான். கல்வி மேலானது என்று கற்று விட்டோமே என்று கவலைப்படுகிறான். சனியான தமிழ் என்று சாடுகிறான். இதை வைத்துக் கல்வி மேன்மையுடைய தன்று என்றோ, தமிழ் சனியான தென்றோ முடிவுகட்டுதல் கூடாது. தையலார் பால் தூது சென்று