பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - T T T - - 130 அன்புள்ள இளவரசனுக்கு ...) பிழைப்பதை ஆதரிக்கின்றான் என்றும் கொள்ளுதல் கூடாது. வறுமையின் கொடுமை மிகுதியால் வேதனைப்பட்டுப் புலம்புவதாகக் கொள்ள வேண்டும். இவ்வாறு வறுமையில் உழன்றவன் தான் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று கூறினானே தவிர காரிகை கற்பது கூடாது எனக் கூறவில்லை. இலக்கண அடிப்படை அறிவு கூட இல்லான் கவிபுனைந் தால், கவிஞனாக மேடையேறி விட்டால், அவன் இலக்கணத்தை வெறுக்கத்தானே செய்வான். இவ்வாறு செய்யுள் இலக்க ணத்தையும் ஏனை இலக்கணத்தையும் அய்யம் அறப் பயிலாமல், புறக்கணித்து ஒதுக்கி விட்டுக் கவிதை பாட வருவோனுக்கு இரவீந்திரநாத தாகூர் ஒர் அருமையான உவமை கூறுகிறார். “வயது முதிர்ந்த கிழவன் இரண்டாந் தாரத்திடம் அன்பைப் பெற முயல்வது போன்றது சீர், தளை அறியாதவன் கவிபாட முனைவது” என்பது அவர் கூற்று. ஒரு முறை தாகூர், மதுரைக்கு வருகை புரிந்தார். அவரைக் காணும் பொருட்டு நம்தமிழ் நாட்டுக் கவிஞரொருவர் சென்று தாகூரைப் புகழ்ந்து கவிதை பாடி அவரிடம் தந்தார். தாகூர், மகிழ்ச்சியும் நன்றியும் மீக்கூர அதை வாங்கிப் படித்தார். கவிதை, ஆங்கில மொழியில் வரையப் பட்டிருந்தது. சிரித்துக் கொண்டே, "குயில் தன் குரலில் பாடினால் தான் நன்றாக இருக்கும்” என்று தாகூர் கூற நம் கவிஞர் நாணிவிட்டார். தாய்மொழி வாயிலாகத்தான் கவிதையை வளர்க்க வேண்டும் என்பது தாகூரின் கருத்து. “வேற்று மொழியினால் கவிதையை வளர்ப்பது காதலியை மணக்க மற்றொருவரை அனுப்புவது போலத்தான்” எனப் பிறிதோரிடத்து தெளிவாகக் கூறியிருக்கிறார் தாகூர்.