பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு ... வெறியுணர்வு தோன்ற வேண்டும்; நனவு அழிய வேண்டும் அக்கூட்டுக்களியில் உள்ளம் கனிய வேண்டும், அக் கனி விலே கவிதை தானாகவே தோன்றும். இவ் வுண்மையைத் திருநாவுக் கர சர், "உள் ளங் கனிந்த போதெல்லாம் உவந்து உவந்து பாடுதுமே” என்று திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு கவிதை வெறி மூண்டு, நன வழிந்து உளங்கனிந்து பாடும் போதுதான், ‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின் பம்” என்று பாரதி பாடினானே அந்தச் சொல்லின்பம் வாய்க்கும். அந்தச் சொல்லின் பம் கொண்ட பாட்டுத் திறத்தா லே தான் வையத்தைப் பாலித்திட முடியும். “மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண் கண் டளவிற் பணியச் செய்வாய்” என்று குமரகுருபரர் கூறியதுபோல மன்னரையும் பணியச் செய்யும் பண் எப்படியிருத்தல் வேண்டும் ? இப்பாடல் மந்திரம் போற் சொல்லின்பம் அமைந்ததாக (இருத்தல் வேண்டும். அதனால் நீ பாடும் பொழுது அத்தகு ஆற்றல் மிகு சொல்லின்பம் அமையப் பாடிப் பழகு. உள்ளத்தில் உணர்ச்சி - கவிதை வெறி பொங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வுணர்ச்சிதான், அவ்வெறி தான் கவிதை க ைள உந்தி வெளி க் கொண ரும் “உணர்ச்சி பொங்கி அடங்கிய பின் ஏற்படும் அமைதியில் திரும்ப அனுபவிக்கப்படும் ஒர் இ ன் பப் பெருக்கே கவிதை” என வேட்சு வர்த்து என்னும் கவிஞர் பெருமான் குறிப்பிடுகிறார். “மனிதனுடைய உள்ளத்தில் அடிக்கடி தோன்றும் உயரிய ஆவேசத்தை வாக்கில்