பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். நல்ல நடையில் எழுதவேண்டு மென்ற ஆர்வத்தைக் கண்டு மகிழ்வுற்றேன். "தந்தையே தங்கள் மைந்தன் மாத்தமிழுக்குத் தீங்கு செய்யேன்; நீங்கள் கூறுமாப்போலே, நூற்கள் பல பயின்று பாடல்கள் எழுத முனைவே ன், இத்துடன் பா ஒன்று விடுத்துளேன் அருள்கூர்ந்து அதனைச் செப்பஞ் செய்து உதவுங்கள் சில நாட்களில் எந்தன் திறமையை வளர்த்துச் சிறந்த பாவலனாக, உங்கள் மனதை மகிழ்விப்பேன்’ எனக் குறித்திருந்தாய். ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆர்வத்து கேற்றவாறு பிழைநீக்கி எழுத முயலுதல் வேண்டும். மாதமிழா? மாத்தமிழா ? உன் மடலில் மாத்தமிழ் என எழுதியிருந்தாய். மா தமிழ் என்றுதான் எழுத வேண்டும். விளக்கம் தருகிறேன்