பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= = 144 அன்புள்ள பாண்டியனுக்கு... களாகத் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருவன; உலக மக்கள் அனைவராலும் பாராட்டிப் போற்றப்பட்டு வருவன, இன்று நாகரிகம் மிக்க நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள், பண்பாடு இன்னதென அறியாக் காலத்திலேயே, இங்குத் தோன்றி வளர்ந்து வந்த பெருமையை உடையன அத்தகைய பண்பாடுகள், இன்று நாளுக்கு நாள் அருகி வரும் நிலையைக் காணுகின்றேன். அவை மீண்டும் தழைத்து வளர வேண்டும் என்ற ஆர்வத்தால், பண்பாடுகளை வளர்க்கத்தக்க கடிதங்களையே இனி எழுத விரும்புகின்றேன். முதலில் அறத்தைப் பற்றி எழுதுகின்றேன். உலகத்தில், மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பனவாம். இம்மூன்றனுள் பொருளும் இன்பமும் அறத்தின் அடிப்படையிலே தோன்றி வளர்வன. இக்கருத்தினைச் "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉந் தோற்றம் போல”என்று புறநானூறு புகல்கிறது. அறத்தால் வரும் இன்பமும் பொருளுமே சிறந்தவை. பிற வகையால் வரும் இன்பமும் பொருளும் இழிந்தனவே. உயர்ந்த இன்பத்தையும் சிறந்த பொருளையும் அடைய நீ விரும்பினால், முதலில் அறத்தையே விரும்ப வேண்டும். அறம் ஒன்றுதான், மக்களுக்குப் புகழையுங் கொடுக்க வல்லது பொருளையுங் கொடுக்க வல்லது. ஆதலின், அள் வறத்தைவிட உயர்ந்த ஆக்கம், உலகத்தில் ஒன்றுண் டென்று உரைக்க இயலாது. மேலும் மேலும் உயர்த்துவதாகிய அறத்தினை மறந்தால், அதை விடக் கேடு வேறொன்றுபே