பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ 穹

தான் கொண்ட கொள்கைக்காக விதவைக் கலப்புத் திருமணம்செய்து கொள்ளத் தாயாரிடம் வேண்டுதல். "ஒரே மகன் என்பதால், அவ்வாறு செய்ய இயலாது" எனத் தாயார் மறுத்தல் (1948) "சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள்" என அன்னையாரிடம் வேண்டுதல், பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் "கலைச்செல்வி" எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் (1949) திருமணமான ஆண்டே தமது துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949) கலப்புத் திருமணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு, தம்பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றிதேடித் தந்ததன் மூலம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார். காரைக்குடியில் மீ.க. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949) 'முடியரசன். எனக்குப் பின் கவிஞன்' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார் (1950) குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு:அகப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர்பிழைத்தார் (1955) மூன்றாவது மகவான ஆண் மகன் பிறத்தல், செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு 'கப்பிரமணியன்' எனப் பெயரிட்டார். (1955) 'கப்பிரமணியன்’ என்ற அம்மகன் மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959) சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார்.கண்ணாடி மாளிகை என்ற திரைப்படத்திற்குப் பாடல், உரையாடல் எழுதினார். திரைத் துறையில் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று, தம் இயல்புக்கும், கொள்கைக்கும், அத்தொழில் சிறிதும் ஒத்துவராததால் திரைத் துறையிலிருந்து வெளியேறினார் (1961) மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962). இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965) 'பூங்கொடி நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966) ஆட்சி மாற்றத்தால் 'பூங்கொடி த டை ஏற்பாடு விலக்கம் (1967) தமிழாசிரியப் பணி ஓய்வு (1978) மதுரைப்பல்கலைக் கழகம் தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985)