பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - ` =ङ्गास्तत्व TT == (60-அன்புள்ள பாண்டியனுக்கு.) கின்றார்! அஃதும் அன்பில் விளைந்த பண்புதான் தம்பி இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திலும் அன்பு இழையோடியிருப்பதைக் காணலாம். - -- - அன் பென்பது தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், என்ற தொடர்புடைய வரிடத்தே தோன்றும் மன நெகிழ்ச்சியேயாகும். அருள் என்பது, தொடர்புடையாரிடத்தும், தொடர் பி ல் ல ரிடத்தும், உயர்திணை, அஃறிணையாகிய எல்லாவுயிர் களிடத்திலும் காட்டப் படும் அன் பாகும். இத்தகைய அருளென்னும் பேராற்றலுக்கு அடிவேராக இருப்பதும் அன்புதான். அருளென்னுங் குழந்தையை ஈன்றெடுத்த தாய் அன்பு தான். குஞ்சுகளுக்கு இரை தேடித் தரும் கோழியைக் கண்டிருப்பாய். பச்சிளங் குருவிகளுக்கு இரையூட்டும் பறவையினங்களைப் பார்த் திருப்பாய். அம்மா வென்றோலமிட்டு, அங்குமிங்கும் துள்ளி வரும் கன்றுகளைக் கண்டவுடன், பால்சுரந் தூட்டும் பசுக்களைப் பார்த்திருப்பாய். இவற்றின் பால் நீ காண்பதென்ன ? அன் பென்னும் பண்பல்லவா ? அ ஃறி ைண யாயினும் , உயர் தி ைண யாயினும் அன்பிற்ககப்படாத வுயிரில்லை. அஃறிணை'யிர் களிடத்திலும் அன்பு துளிர் விட்டுக் காணப்படுவதாயின் உயர்தினையாம் மாந்தரிடம் அவ் வன்பு செழித்து வளர வேண் டாவோ ? உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் அன்பு அரும்பி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டுமல்லவா ? அன்பைத் துணையாகக் கொண்டு வாழ் பவன் தான் மனிதன் என்று சொல்லப்படுவான்; உயிருள்ள மனிதனென