பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் மாந்தர், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக் கூடி வாழக் கற்றுக் கொண்டாலன்றிச் சமுதாயம் என்ற பெயர் பொருந்தாது. விலங்குகளுக்கும் மாந்தருக்கும் உள்ள வேறுபாடு இதுதான். விலங்குகள் கூடி வாழக் கற்றுக் கொள்ளத் தெரியாதவை; அவ்வாறு வாழ்வதற் குரிய அன்பை அறியாதவை, ஆயினும், அவற்றுட் சில இனங்கள் கூடி வாழ்வதையுங் காண்கிறோம். கூட்டு வாழ்க்கைக்கு அன்பே சிறந்த துணையாகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையுஞ் சிறந்து விளங்க வேண்டுமானால், அன்பு அவர்கள் வாழ்க்கையைப் ற்றிப் பிணைந்திருக்க வேண்டும். அன் பில்லாத வாழ்க்கை என்றுமே சிறக்காது. வலிய பாறை நிலத்திலே வரம் தளிர்த்து வளர முடியுமா ? மென்மையான நிலத்திலே தான் அது தளிர்த்துச் செழித்து வளர முடியும். அதைப் போலவே வாழ்க்கையும், அன்பு என்ற மென்மை யிலே தான் வளர்ந்து சிறக்கும். அன்பற்ற, வறண்ட வன்னிலத்தே அது வளராது; சிறக்காது. காய்ந்து, உலர்ந்து, வாடிவிடும். ஒருவனுக்கு நடக்கக் கால்கள் வேண்டும்; காணக் கண்கள் வேண்டும்; கேட்கச் செவிகள் வேண்டும்; பேச வாய் வேண்டும். இவ்வுறுப்புகள் எல்லாம் செவ்வனே அ மையப் பெற்றாலும், அகத்துறுப்பாகிய அன்பும் பெற்றிருந்தாற்றான், அவற்றாற் பயனுண்டு. அகத்துறுப்பு, புறத்துறப்பு என்னும் இரண்டனுள், அகத்துறுப்பாகிய அன்பு இல்லையானால் புறத்துறுப்புகள் எத்து ைண ச் சிறப்புற்றிருந்தாலும் அவற்றால் யாது பயன் ? ஏனைய