பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கம் அறிந்து இணங்கு அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி. உனக்கு ன் வாழ்த்து. முன் எழுதிய கடிதத்தில் அன்பு, நட்பை உண்டாக்கு தற்குச் சிறந்த துணையாகும் என எழுதியிருந்தேன். யும் அதன் வண்ணம் ஒழு கிப் புதிய நண்பர்களைப் பெற்றுள்ளதாக எழுதியிருக்கின்றாய். அது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் நட்பைப் பற்றி இக்கடிதத்தில் எழுத விரும்புகிறேன். மனிதன் தனக்கென்று தேடிக் கொள்ள வேண்டிய பொருள்கள் பலவுள்ளன. அவற்றுள், தலையாயது நட்பு ஒன்றேயாகும். அதைப் போலச் சிறந்ததாகக் கருதுவதற்கு ஒன்றுமே இல்லை என்லாம். நட்பு, ஒருவனுடைய வாழ்விலே அரியதொரு காவலாக அமைந்து விடுகிறது. அதைவிடச் சிறந்த காவலாக அமையும் பொருள் வேறில்லை. உயிர் காப்பான் தோழன் என்னும் பழமொழியை இங்கு