பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

জলদানীন இளவரசனுக்கு --- --- - — - - 8 திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை, போர்வாள், முல்லை, எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன், நம்நாடு, வாரச் செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புதுவாழ்வு. தனியரசு, சங்கொலி, வாழ்வு, தோழன், திராவிடமணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குவியல், செந்தமிழ்ச் செல்வி, கலைக்கதிர், அமுத சுரபி, கழகக் குரல், மறவன்மடல், சமநீதி, உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ்முரசு, தமிழ்நாடு, அலைஓசை, தமிழ்நேசன் (மலேசியா), கவிதை, முல்லைச்சரம், தமிழரசு, குங்குமம், தினமணிகதிர், தினமணி ஆகிய இதழ்களிலும் மற்றும் பல்வேறு இதழ்களிலும் கவிஞர் தமது எழுத்தோவியங்களைத் திட்டியுள்ளார். கவிஞரது கவிதைகள் பல சாகித்திய அகாதமியால் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்திலும், உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கவிஞரது நூல்கள் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக் கழகங்களில் இவர்தம் நூல்கள் 'முனைவர் மற்றும் எம்.ஃபில் பட்டத்திற்காகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பாவரசர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்ற ஆய்வுநூல் முனைவர் மு. இளங்கோவன் என்பாராலும், முடியரசன் படைப்புகள் ஒர் ஆய்வு' என்ற ஆய்வு நூல் முனைவர் சிரீகுமார் என்பாராலும், பூங்கொடியும் மணிமேகலையும் என்ற ஒப்பாய்வு நூல் முனைவர் மு.நிலாமணி என்பாராலும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம் என்னும் பெயரில் புலவர் தி.மு. அர சமாணிக்கம் என் பார், ஈரோட்டில் மன்றம் அமைத்துத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார். பெற்ற பாராட்டுகள் பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவிமாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர். கவிதை இமயம். தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவிபுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர். தமிழிசைப் பாவலர். வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர். திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர்,