பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_. - அன்புள்ள பாண்டியனுக்கு... - == பாராட்டப்படுகின்றார். நாடு, மொழி, சமயம், கட்சி என்ற வேற்றுமைகளையுங் கடந்து பாராட்டப்படுகின்றார். அவர்தம் நெஞ்சங்களில் நிலைத்த இடத்தையும் பெற்று விளங்குகின்றார். காரணம் என்ன ? அவர், உண்மையைக் கடைப்பிடித்து ஒழுகிய தாற்றான் அந்நிலையினை எய்தினார். காந்தியடிகளின் சொல்லில் உண்மை சுடர்விட்டது: செயலில் உண்மை செறிந்து விளங்கியது; இவற்றினும் மேலாக உள்ளத்திலும் உண்மை ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. உள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய காரணத்தால் அவர், உலகத்தார் உள்ளத்திலெல்லாம் உறையும் தகுதி பெற்றார். 'உண்மையே கடவுள்' என்ற கோட்பாட்டிற் சிறிதேனும் பிறழாது வாழ்ந்து வந்தார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாகும் அல்லவா ? ஒளியும் அதனால் வலிவும் பெற்ற வாக்கினால் உலகத்தையே தன்வயமாக்கும் பேராற்றலைப் பெற்று விளங்கினார். உண்மையைத் துணையாகக் கொண்டமையால், பேரரசை எதிர்த்துப் பேசும் திண்மையையும் போராடி விடுதலை பெறத் தக்க ஆண்மையையும் உடையவ ராகித் திகழ முடிந்தது. உண்மை என்னுங் கருவிக்குமுன், அஞ்சத் தக்க படைக்கலங்கள் தூள்தூளாகின. உண்மைக்கு அத்தகைய ஆற்றலுண்டு. அஞ்சா நெஞ்சமும் ஆண்மையுந் தரத் தக்க உண்மையை - வீரமும் வெற்றியுந் தர வல்ல உண்மையை நீயுங் கொண்டிலங்க வேண்டும். உண்மைக்கு வாய்மை, மெய்ம்மை என வேறு பெயர்களும் உண்டு. இம்மூன்ற சொற்களும்