பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o --- T - - - அன்புள்ள பாண்டியனுக்கு... 170 மனிதன். ஆதலின், அவனுக்கு அடிக்கடி இப் பண்பை நினைவூட்ட வேண்டியுளது; வற்புறுத்திச் சொல்ல வேண்டி வருகிறது; இயற்கைப் பண்பைச் செயற்கையாக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விட்டது. ஒவ்வொருவனும் பிறருக்கு உதவியாக வாழவேண்டுவது கடமை, இயல்பு, மனிதத்தன்மை என்ற உணர்வையே மறந்து விட்டான். ஒப்புரவு, கைம்மாறு கருதிச் செய்யப்படுவதன்று, தன் கடமைகளுள் ஒன்றென்றுணர்ந்து, விரும்பிச் செய்யத் தக்கது. மனிதனுக்கு வேண்டிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதைத் தெளிவுறுத்த வே அதனை க் "கடப்பாடு’ என வள்ளுவர் குறித்தனர். மேகம் மழை பொழிகிறது; மழையின் நீரால் உலகுக்குதவி, அதனைக் காத்தல் செய்கிறது. அது, கைம்மாறு கருதியா மழை பொழிகிறது ? குளிர்ந்ததும் தன்னியல் பில் பொழிந்து செல்கிறது. அதைப் போலவே மனிதனும் கைம்மாறு கருதி ஒப்புரவாற்றுதல் கூடாது. மனங்குளிர்ந்து - அன்பால் உருகி, இயல்பாக உதவி யொழுக வேண்டும். பறம்புமலை பாண்ட பாரி, வாரி வாரி வழங்கி, உலகைக் காத்தான்; கைம்மாறு கருதியா அதனைச் செய்தான் ? முல்லைக் கொடிக்குத் தேரை விட்டுச் சென்றானே, கைம்மாறு கருதியா அவ்வாறு செய்தான் ? அப்பண்பு, அவனுக்கு இயல்பாகவே அமைந்து கிடந்தது. இயல்பாகக் கடமையாற்றுந் தன்மையினால், உலகு புரக் குந் தொழிலிற் பாரியையும் மாரியையும் சேர்த்துக் கூறினர் புலவர்.