பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் வாழும்போதும் தன்னை நாடிவந்த புலவருக்குத் தன் தலையைக் கொடுக்க முன்வந்ததை ஈண்டு நினைவு கொள்க. ஒப்புரவாளன் ஒருபோதுங் கெடுவதில்லை. கேடுவரு மெனினும் தன்னை விற்றாவது அக்கேட்டினை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது வள்ளுவத்தின் வாய்மொழி, ஒப்புரவினால் வருங் கேடு, கேடாக மதிக்கப்படுவதில்லை; உயர்ந்த புகழுக்குரியதாகவே கருதப்படும். ஆதலின், ஒப்புரவறிதல் கடமையெ ன்றுணர்ந்து, கைம்மாறு கருதாது, வேளாண்மை செய்து, வறுமைக் காலத்தும் வழுவாது நின்று உலகுக்குதவியாக வாழ்வாயாக. "தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு”. இங்ங்னம் அறிவுடை நம்பி