பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள அரசு, உன் கடிதம் பெற்றேன். மகிழ்ச்சி. அரையாண்டுத் தேர்விற் பெற்ற மதிப்பெண்களைக் குறித்துள்ளாய். காலாண்டுத் தேர்வைவிடக் குறைந்துளவே ! காரணம் என்ன ? படிப்பில் முயற்சிக் குறைவாக இருந்திருக்கிறாய் என்பதைக் காட்டுகிறது அது. தேர்வில் வெற்றி பெற்றாற் போதும் என்ற எண்ணிக்ட்டும் போதாது. வகுப்பில், கல்லூரியில் முதல்வனாக விளங்க வேண்டும். அதற்கேற்ற முறையில் நன்கு படித்து, ஆண்டுத் தேர்வில் முதல்வனாக வெற்றி பெற முயன்று படி, உன் கடிதத்தில் இன்னும் எழுத்துப் பிழைகள் உள்ளன. இன்னும் சிறிது அக்கறை கொண்டால் பிழையின்றியே எழுதி விடலாம். எவ்வளவு படித்துப் பட்டம் பெற்றிருப்பினும் பிழைபட எழுதுவோர் நன்கு மதிக்கப்படார். அதனாற் பிழையின்றி எழுதப் பழகு. பழகி வெற்றி பெறு. பிழைபட எழுதுவது ஒரு மொழிக்குச்