பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டும் முழுப்புலமை அடைய இயலாது. எவ்வளவு தான் கற்றாலும் கற்றறிந்த நல்லோருடைய வாய் மொழிகளையும் கேட்டுப் பழக வேண்டும். இரவு பகலாக அரும்பாடு பட்டுக் கற்றறிந்தாலும் நாம் அறியாத ஒன்றை, சிறந்த ஒன்றை மற்றொருவர் அறிந்து வைத்திருப்பார். அதனால் பிறர் சொல்லக் கேட்கும்பொழுது, நாம் அறியாததையும் அறியும் வாய்ப்பு நேரும். நாம் அறிந்ததைவிடச் சிறந்தது- உயர்ந்தது வேறொன்றில்லை என்றெண்ணினால் நமக்கும் கிணற்றுத் தவளைக்கும் வேறுபாடே இல்லை. இக்கிணற்று நீரைவிடச் சிறந்த நீர் எங்குமே இல்லை என்றுதான் அத்தவளையுங் கருதிக் கொள்கிறது. அவ்வாறு நாமும் இருந்துவிடுதல் கூடாது. யாழிசை கேட்கும் பொழுது எத்தகைய இன்பம் பயக்கின்றதோ, குழலிசை எப்படித் தனிச் சுவை கொடுக் கின்றதோ அப்படியே கேள்விச் செல்வமும் ஒப்பற்ற இன்பந் தருகிறது; அவற்றினும் மேம்பட்ட பேரின் பத்தை பெருநலத்தைத் தருகிறது. அக்கேள்விச் சுவையை நுகர்ந்து பயன் கொண்டோர் நன்கறிவர் அவ்வின் பத்தின் பெருமையை. கேள்வியைச் செல்வம் என்று குறித்தேன். ஆம்; அதுவும் ஒரு செல்வந்தான். கல்வி எவ்வாறு கேடில் விழுச் செல்வம்' எனப்படுகிறதோ அதைப் போலவே இதுவுஞ் செல்வத்துட் செல்வமாகவே கருதப்படும். இன்னுங் கூறப்பு கி ன், செல்வத்து ளெல்லாந் தலையாய செல்வ மாகவே கொள்ளப்படும். இக் கேள்விச் செல்வத்தால் உண்டாகும் நன்மை அளவிடற்கரியது. நீ பலவுங் கற்கிறாய்; கற்றமையால் அறிவு