பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு, ஊன்றுகோல் எப்படி யுதவுமோ அப்படியே, வாழ்க்கை நிலத்தில் நடப்பவனுக்குக் கேள்வியறிவு துணை செய்யும். கேள்விச் செல்வம் நல்லது, சிறந்தது, நலம் பல பயப்பது என்றெல்லாம் எழுதினேன். அதனால் எப்படிப்பட்டவர் சொன்னாலுங் கேட்கலாம். எதை வேண்டுமானாலுங் கேட்கலாம் என்றெண்ணி விடாதே. அப்படிக் கேட்பதினுங் கேளாமலே இருப்பது மேல். நமக்குச் சொல்பவர்கள் படித்திருக்கலாம்; பட்டம் பல பெற்றிரு க்கலாம்; பரிசுகளும் பாராட்டுகளும் அடைந்திருக்கலாம். அவை மட்டும் போதா. ஒழுக்கமும் உடையவராக இருக்க வேண்டும். ஒழுக்கமுடையார் வாய்மொழிகளே நமக்கு உறுதுணையாவன. அஃதிலார் மொழிகளைக் கேட்பதால் எவ்வகைப் பயனும் இல்லை. எதை வேண்டுமானாலுங் கேட்கலாம் என்பதுந் தவறு. நல்லனவற்றையே கேட்க வேண்டும். நல்லனவற்றைச் சிறிதளவு கேட்டாலும் அந்த அளவுக்கு நிறைந்த நன்மையுண்டு. இக்காலத்தில் எவரும் பேசுகின்றனர்; எதையும் பேசுகின்றனர். அவற்றைக் கேளாதே; அங்கெல்லாம் செல்வதே தீது, ஒழுக்கமுடையார் வாய்ச் சொற்களை, நல்ல சொற்களைக் கேட்க முயல்வாயாக. கேட்டுக் கேட்டுப் பழகாத செவிகள் செவிட்டுச் செவிகளேயாகும். பணிதல் எல்லார்க்கும் நன்று, இன் சொல்லினதே அறம் என்று நான் உன்னிடம் பல முறை உரைத்திருக்கின்றேன். அப் பண்ணிந்த மொழியும், இனிய சொல்லும் நீ பெறவேண்டுமானால், நுண்மாண் நுழைபுல