பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் வருவான். இறுதியில் தோல்வியைச் சந்தித்தே திருவான். ஒன்றைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்த போதிலும் அதனைச் செய்யாமலே கெட்டொழி வான். அம்மட்டில் அமையுமோ ? இன்னும் பல தீமைகளுக்கும் காரணமாகும் அச்சோம்பல். சோம்பலுடையவன், நண்பர்களாலும் இகழ்ந்து சொல்லப் படுவான்; எள்ளி நகையாடப் படுவான். முயற்சி யெதுவுமே யின்றிச் சோம்பலையே விரும்பியலைபவனைத் திருத்த வேண்டுமென்ற ஆர்வத்தால், நண்பர் அடிக்கடி இடித்துரைப்பர். அப்பொழுதாவது அவன் முயற்சியை மேற்கொள்ளுவான், சோம்பலை விட்டொழிப்பான் என எண்ணி, அவ்வாறுரைப்பர். அவ்வாறு பலமுறையிடித்துரைத்தும் அவன் திருந்தாவிடின் இகழ்ந்துரைக்கத்தானே செய்வர்? பாவம் ! நண்பர்களின் இகழ்ச்சியுரைக்கும் ஆளாகி விடுகிறான். மேலும் சோம்பலாளன் ஒன்றுஞ் செய்ய மாட்டாமையாற் பகைவர்க்குங்கூட அடிமையாகி விடும் சூழ்நிலைக்கு இரையாகி விடுவான். தனி மனிதனுக்கே சோம்பல், இவ்வளவு துன்பந் தருகிற தென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டவனுக்கு, புதிய சமுதாயத்தை உருவாக்க நினைப்பவனுக்கு, சமுதாயத்தைத் தன் வழியில் இட்டுச் செல்பவனுக்கு எவ்வளவு கேடுகள் தரும் என்பதை எண்ணிப்பார். நாட்டையே பாழ்படுத்தி விடுமல்லவா ? அதனால் அவனுக்குத் தூங்காமை' (சோம்பலின்மை) வேண்டுமென்று வள்ளுவர் கூறுகின்றார்.