பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T- - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - == T - 198 அன்புள்ள பாண்டியனுக்கு... சோம்பலுக்கு மடி என்றொரு பெயருமுண்டு. மடி, தன்னையுடையவனை மடியச் செய்துவிடும் என்பதை அறிவுறுத்துவது போல் இருக்கிறது அச்சொல். அதனால் ஒன்றைச் செய்யும் பொழுது, இது நம்மால் முடியுமா? என்று தளரக்கூடாது; தளர்ந்து சோம்புதல் கூடாது. சோம்பலின்றி முயல வேண்டும். முயன்றால் அது பெருமை தந்தே தீரும். அதனால் சோம்பலை விட்டொழி. தொடர்ந்து முயற்சி செய். "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண் பயன் எய்தல் அரிது”. இங்ங்னம், அறிவுடை நம்பி