பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... 'தமிழ், இலக்கிய வளஞ்செறிந்த மொழிதான்; ஆனால், அறிவியற் கலைகளை அது பெறவில்லையே! ஆங்கிலமல்லவா அக்கலைகளனைத்தையும் பெற்றுள்ள்து; அதனால் அக்கலை களைக் கற்று நாமும் முன்னேற, ஆங்கிலந்தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அப்பெருமக்கள் பேசியதாக எழுதியிருக் கிறாய். ஆம்; உண்மைதான்; அறிவியற் கலைகளை ஆங்கிலம் பெற்றுள்ளது உண்மை தான். அதற்காக எந்தக் காலத்திலும் இரவல் பெற்றே வாழவேண்டுமா ? அவ்வாறு வாழ வேண்டுமென்று நியதியா ? நம் தாய்மொழியும் அம்மொழியைப் போல் எப்பொழுதுதான் அந்தக் கலைகளைப் பெற்றுவிளங்குவது? அதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டாவா? முயல வேண்டு மென்ற ஆர்வமாவது தோன்ற வேண்டாவா ? அக்கலைகளை யெல்லாந் தாய்மொழியில் ஆக்கிக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியிலல்லவா நாம் இறங்கியிருக்க வேண்டும்? அவ்வாறு செய்யக் கருதாது, ஆங்கிலத்திற்றான் கற்கவேண்டும், ஆங்கிலத்திற்றான் கற்பிக்க வேண்டுமென்று அடம்பிடித் தால் நாம் விடுதலைபெற்று விட்டதாகச் சொல்லிக் கொள்வதிற் பொருளேயில்லை. இன்று, விண்வெளியிலே வட்டமிட்டு வருமளவிற்கு விஞ்ஞான வளம்பெற்ற நாடுகளைக் காண்கின்றோம்; திங்கள் மண்டிலத்திலே சென்று தங்கி வருமளவிற்கு விஞ்ஞான வளம் பெற்றுள்ள நாடுகளையுங் காண்கின்றோம். அந்நாடுகளெல்லாம் ஆங்கில மொழியைப் பயிற்றுமொழி