பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கவியரசர் முடியரசன் -- - –- யாகக் கொண்டுள்ளனவா? உருசியநாடு, ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டா இந்த நிலையை யடைந்துள்ளது? கடந்த உலகப் பெரும்போரிலே அணுக் குண்டுக்கிரையாகி, மீண்டும் புத்துயிர் பெற்று, தொழில் வளஞ்சிறந்து, உலக அரங்கிலே தலைநிமிர்ந்து நடக்கிற சப்பான் நாடு, அதன் தாய்மொழியைத்தானே பயிற்று மொழியாகக் கொண்டிருக்கிறது! பிரெஞ்சு நாட்டினரும், செருமானிய நாட்டினரும் தத்தமது தாய்மொழியை உயிராகப் பேணுவதைக் காண்கின்றோம். தாய்மொழியைப் பேணும் இந்த நாடுகளெல்லாம் முன்னேறியிருக்கும் பொழுது, அவற்றைப் போல நாமும் தாய்மொழியைப் பேணி, அக்கலைகளைத் தமிழில் ஆக்கிக்கொண்டு, கற்றால் - கற்பித்தால் நாம் மட்டுந் தாழ்ந்தா விடுவோம் ? தாய் மொழியைப் பேண வேண்டுமென்ற பற்றுள்ளம் வேண்டும் தம்பி. தாய் மொழியை மறந்து, அயல் மொழிக்கே அடிமையாகி, அதற்காகப் பரிந்து பேசும் ஒருவன், தமிழனென்று தன்னைக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவனா கின்றான். இவ்வாறு நான் கூறுவதால் ஆங்கிலத்தையோ பிற அயல்மொழிகளையோ வெறுக்கின்றேன் என்று கருதி விடாதே. உலகத் தொடர்புக்கு அம்மொழி எவ்வளவு தேவை யென்பதை அழுத்தமாக நம்புபவன் நான். அதற்காக, உள் வீட்டுக்குள் அதனையமர்த்தி விட்டு, உன்னைப் பெற்றவளைத் துரத்திவிட ஒருபோதும் நான் உடன்பட