பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... மாட்டேன். ஒப்பனை செய்துகொள்ள விரும்பும் ஒருவன் ஆடையின் துணையையும் நாடுகின்றான்; அணிகலன் களையும் நாடுகின்றான். அது போலவே முன்னேற்றம் பெற விரும்பும் நாடும், தாய் மொழியின் துணையையும் நாடுகிறது; அயல் மொழியின் உதவியையும் நாடுகிறது. தாய்மொழி ஆடை போன்றது; அயல் மொழி அணிகலன் போன்றது. அணிகலனின்றி மனிதன் வெளி வரலாம்; ஆடையின்றி அவன் வெளிவர இயலாது. வெளிவந்தால் பித்தன் என்றுதான் உலகம் பேசும். தாய்மொழியை மறந்த நாட்டின் நிலையும் அப்படித்தான். ஆங்கிலம் போன்ற அயல் மொழிகளைக் கற்பது நல்லதுதான். ஆனால், மொழி யென்ற அளவிற் கற்க வேண்டுமே தவிர, கலைகளையும் பாடங்களையும் அம்மொழியிற்றான் கற்பிக்க வேண்டுமென்பது கருத்துடைய செயலாகாது. ‘என் வீட்டைச்சுற்றி நாற் புறங்களிலும் சுவர் எழுப்பப்படுவதையோ, சாளரங்கள் அடைக்கப் படு வதையோ நான் விரும்பவில்லை. என் அகத்தைச் சுற்றி அனைத்து நாடுகளின் கலைப்பண்பும், தங்குதடையின்றி மணம் வீச வேண்டு மென்றே விரும்புகின்றேன். ஆனால், அவற்றில் எதுவும் என் காலை வாரி விடுவதை ஒத்துக் கொள்ள மாட்டேன். இது காந்தியடிகளின் வாய்மொழி தம்பி. இந்த மனப்பாங்கைக் குறுகிய மனப்பான்மை யென்றோ, வெறுப்புணர்ச்சி யென்றோ, நாட்டுக்கு நலந்தராது என்றோ கூறுவராயின், அவர்தம் அறிவை என்னென்று கூறுவது ! தாய்மொழிப் பற்றில்லாத, நெஞ்சமும் நினைப்பும் அயல்