பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 20 -T = அன்புள்ள இளவரசனுக்குெ - - - நீ எந்த மாணவரொடும் பகையுணர்ச்சி கொண்டு பழகாதே. இன்றைய நிலையில் பகையுணர்ச்சி வளரத்தக்க சூழ்நிலை இருந்து வருகிறது. சாதி, சமயம், அரசியல் எத்துறையிலும் பகையுணர்வே தலை தூக்கி நிற்கிறது. அப்பகையுணர்வு அறவே கூடாது. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் மாறுபாடு இருத்தல் ஆகாது. நாங்கள் படிக்கும் பொழுது சாதி, மதம், அரசியல், கொள்கை இவற்றால் வேறுபட்ட எத்தனையோ பேர் கலந்து படித்தோம். ஆயினும் எம்மிடையே பகையுணர்ச்சி இருந்ததே கிடையாது. நட்பு, பழகும் முறை அந்நிலையில் இருந்தன எங்கள்பால். நம் நாட்டுத் தலைவர்கள் சொற்களை, வரலாற்றைக் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் நாமும் அவ்வாறிருத்தல் வேண்டும் என்று ஆர்வங்கொள்ள வேண்டும். திரு. வி.க. அவர்களைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா ? அப்பெருந்தகை, பெரியார் இராமசாமி அவர்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, அவரையும் (ஈ.வெ.ரா) என்னையும் நண்பராக்கியது அரசியல் உலகம். அவரும் யானும் ஒரு போது ஒன்றிய கருத்துடன் அரசியற்தொண்டு செய்து வந்தோம். மற்றொரு போது இருவரிடையும் அத்துறையிற் கருத்து வேற்றுமை மலையென எழுந்து நிற்கலாயிற்று. அந்நிலையில் இருவரும் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் மலை மறைந்து போகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுதான் பெருந்தன்மை, தமிழ்ப்பண்பாடு, மனிதப் பண்பாடு.இவ்வாறு மனிதப் பண்புக்கு ஊறு நேராவண்ணம் நீயும் பழகு, பகையுணர்வை விடு. பற்றாமாக்கள் தம்முடனாயினும், செற்றமுங்கலாமும் செய்யாதிரு.