பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க க T - T =`=` - அன்புள்ள பாண்டியனுக்கு... ஒருவர் செய்த Aதவி தினையளவைப் போலச் சிறிதாக இருக்கலாம். ஆயினும் அவ்வுதவியின் அளவை வைத்து மதிப்பிடுதல் கூடாது. அதன் பயன் அளவைக் கொண்டே மதிப்பிடுதல் வேண்டும். அவ்வாறு மதிப்பிடும் பொழுது அச்சிறிய வுதவி பனையளவினதாகத் தோன்றும். அவ்வுதவியின் பயனை யறிந்தவர் இவ்வாறு தான் கருதுவர். இவ்வாறு கருதும் சான்றோர், தமது துன்பக் காலத்துத் துணையாக நின்றவருடைய நட்பை விட்டு விடமாட்டார்; தம் துன்பத்தை நீக்கியுதவி செய்தவர் களுடைய நட்பை ஏழு பிறப்பினும் நினைந்து கொண்டிருப்பர். ஒருவன் செய்த ທພ.ທມ மறந்து விடுவதுதான் நல்லது; நன்மையை மறப்பது அறமன்று. ஒருவன் செய்த தீமையை எவ்வாறு மறக்கமுடியும் என நீ கருதுவாய். அதற்கும் வழியுண்டு. ஒருவன் எத்தகைய கொடுமையைச் செய்திருப்பினும் கொலையை யொத்த கொடுமையைச் செய்திருப்பினும், அதனையும் எளிதில் மறந்துவிட வழியுண்டு. ஒருவன் செய்த கொடுமைகள் மனக் கண் முன் தோன்றும் பொழுது, அவன் நமக்கு முன்பு செய்த ஒரு நன்மையை நினைந்தாற் போதும்; அக் கொடுமை களெல்லாம் மறைந்துவிடும். தினைத்துணை நன்றியும் பனைத்துணையாகக் கருதப்படும்பொழுது, அக்கொடுமைகள் சிறியனவாகித் தாமே யழிந்துவிடுமல்லவா ? இதனாற்றான் ஒருவர் செய்த நன்றியை நினைந்து கொண்டே யிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவன் எத்தகைய குற்றங்களைச் செய்யினும், அச் குற்றங்களிலிருந்து நீங்கிக்கொள்ளும் கழுவாய்களுண்டு